விண்வெளியில் படப்பிடிப்பு நிறைவு: விரைவில் வெளியாகிறது ‘தி சேலஞ்ச்’ திரைப்படம்..!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 4:58 pm
Quick Share

மாஸ்கோ: விண்வெளியில் படமாக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் குறித்த ‘தி சேலஞ்ச்’ என்கிற ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் ஓர் விண்வெளி வீரருக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் விண்வெளி செல்லும் ஓர் மருத்துவர் அதனை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதே படத்தின் ‘தி சேலஞ்ச்’ மையக்கரு ஆகும்.

இத்திரைப்படத்தில் இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு கடும் போட்டியாக விளங்குவது ரஷ்யாதான்.

latest tamil news

விண்வெளி சென்று திரும்பி வந்த முதல் ரஷ்ய நாய் லைகா. முதல் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின். முதல் பெண் விண்வெளி வீராங்கனை வேலன்டினா. இதனையடுத்து தொடர்ந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபடும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம், வரும் டிசம்பர் மாதம் ஜப்பானிய செல்வந்தர் யுஸாகா மசாவாவை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்புகிறது.

அதே சமயத்தில் உலகத் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவு முதன்முறையாக விண்வெளியில் விண்வெளி வீரர்கள் குறித்த ‘தி சேலஞ்ச்’ என்கிற ஆவணப்படம் படமாக்கப்பட்டது. இந்த ஆவணப் படத்தையும் ரஷ்யாவே தயாரித்து வெளியிட உள்ளது.

ரஷ்ய இயக்குனர் க்லிம் ஷிபெங்கோ தலைமையிலான குழுவினர் இந்த படப்பிடிப்பை நடத்த கடந்த 12 நாட்களாக விண்ணில் உள்ள ஐ.எஸ்.எஸ்., சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றுள்ளனர்.

இதேபோல ரஷ்யா தொடர்ந்து விண்வெளி பரிசோதனை முயற்சியில் முன்னோடியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 486

0

0