டிசம்பர் 6-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்

Author: Udhayakumar Raman
26 November 2021, 9:52 pm
Quick Share

இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா – ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.டிசம்பர் 6 ஆம் தேதி, இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டிற்காக புதின் இந்தியா வரவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில், பிரதமர் மோடியும், புதினும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மூலோபாய கூட்டாண்மை உறவுகளை மேலும் மேம்படுத்துவது பற்றி விவாதிக்கவுள்ளனர். மேலும் ஜி20, பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் ஆகியவற்றுக்குள் கூட்டு சேர்ந்து செயல்படுவது குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவுள்ளனர். 2019-ம் ஆண்டுக்குப்பிறகு பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 558

0

0