கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு..? இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு..!

4 May 2021, 7:47 pm
S_Jaishankar_UpdateNews360
Quick Share

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் லண்டனில் நடந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்.

நேற்று அவர்கள் சந்தித்த பின்னர், ஜெய்சங்கர், தடுப்பூசி திறன்களை விரிவாக்குவதில் உலகளவில் இருதரப்பின் ஒத்துழைப்பு எவ்வாறு உதவக்கூடும் என்று விவாதித்ததாக கூறினார்.
“நாங்கள் விவாதித்த பல விஷயங்ங்களில், முதன்மையானது, கொரோனா நிலைமையைக் கையாள்வதில் அமெரிக்காவிலிருந்து எங்களுக்கு கிடைத்த வலுவான ஆதரவு. நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

பிளிங்கன் கூறுகையில், “கொரோனாவின் ஆரம்ப நாட்களில் இந்தியா மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த முறையில் எங்கள் உதவிக்கு வந்தது எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்ய உறுதியாக இருக்கிறோம், பின்னர் எங்கள் உண்மையான உலகளாவிய சவாலை சமாளிக்க உதவும் வகையில் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்.” என்றார்.

கொரோனா பாதிப்புகளில் பேரழிவுகரமான எழுச்சியை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்கா இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன், ஏற்கனவே நான்கு விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற முக்கிய மருந்துகளை அனுப்பியுள்ளது.

ஜி 7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொள்ள ஜெய்சங்கர் லண்டன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 161

0

0

Leave a Reply