இந்தியர்கள் முகஸ்துதி செய்பவர்களா..? அமெரிக்க அதிபரின் இந்திய எதிர்ப்பு மனநிலை..! ரகசிய டேப் வெளியானதால் சர்ச்சை..!
5 September 2020, 7:18 pmஅமெரிக்காவில் புதிதாக வெளியிடப்பட்ட ரகசிய வெள்ளை மாளிகை ஒலி நாடாக்கள், அன்றைய ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆகியோரின் இந்தியர்கள் குறித்த ஆழ்ந்த வேரூன்றிய வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நாடாக்கள் நிக்சனின் கீழ் தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் கொள்கையை விரிவாக எடுத்துக்காட்டுகின்றன. இந்தியர்கள் மீதான அமெரிக்க அதிபரின் வெறுப்பு முக்கிய முடிவுகளை எவ்வாறு பாதித்தது என்பதைக் காட்டுகிறது.
ஜூன் 17, 1971 அன்று ஓவல் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் குழுவுடன் நடந்த சந்திப்பின் போது, நிக்சன் இந்தியப் பெண்களை உலகின் மிகவும் கவர்ச்சியற்ற பெண்கள் என்றும், இந்தியர்கள் மிகவும் பாலின ஈர்ப்பே இல்லாதவர்கள் மற்றும் பரிதாபகரமான” மக்கள் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
முக்கிய பதவிகளில் உள்ளவர்களை ஈர்ப்பதே இந்தியர்களின் சிறந்த திறமை :
நிக்சனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்தியர்களை அருமையான முகஸ்துதி செய்பவர்கள் என்று வர்ணித்தார். “மிஸ்டர் பிரசிடெண்ட், அவர்கள் மிகச்சிறந்த முகஸ்துதி செய்பவர்கள். அவர்கள் முகஸ்துதியின் எஜமானர்கள். அவர்கள் முகஸ்துதியில் மிகவும் நுட்பமானவர்கள். அதனால் தான் 600 ஆண்டுகளாக அவர்கள் தப்பிப் பிழைத்தார்கள். முக்கிய பதவிகளில் இருப்பவர்களை முகஸ்துதி செய்து ஈர்ப்பதே அவர்களின் சிறந்த திறமை.” என நிக்சன் தெரிவித்துள்ளார்.
கிஸ்ஸிங்கர் பாகிஸ்தானியர்களைப் பற்றியும் தனது கருத்தை வெளியிட்டார். அவர்கள் மிகவும் பழமையானவர்கள் என்றும் அவர்களிடையே இந்தியர்களின் நுணுக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானியர்கள், அன்றைய கிழக்குப் பாகிஸ்தானான வங்கதேசத்தில், இனப்படுகொலையில் ஈடுபட்டிருந்தபோது நிக்சன் பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியை ஆதரித்தார். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக 10 மில்லியன் அகதிகள் இந்தியாவுக்குள் தப்பி ஓடி வந்தனர்.
இந்தோ-பங்களாதேஷ் போர்
தெற்காசியா அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் போர்க்களமாக இருந்தது.
1971’ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதால் இந்தியர்கள் மற்றும் பிரதமர் இந்திரா காந்தி மீது நிக்சன் கொண்டிருந்த வெறுப்பு வெளிப்படையானது. பங்காளதேஷின் விடுதலையைத் தடுக்க நிக்சன் விமானம் தாங்கி யுஎஸ்எஸ் எண்டர்பிரைஸ் தலைமையிலான 7’வது கடற்படையை வங்காள விரிகுடாவிற்கு அணிதிரட்டியது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை வழங்காது என்று ஐக்கிய நாடுகள் சபையில் அறிவித்த போதிலும் பங்களாதேஷ் போரின் போது, ஐ.நா மற்றும் அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து, நிக்சன் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கினார்.
யுனைடெட் கிங்டம் அமெரிக்காவை ஆதரித்தது மற்றும் எச்.எம்.எஸ் ஈகிள் என்ற விமானம் தாங்கி தலைமையிலான பிரிட்டிஷ் கடற்படைக் குழுவையும் அனுப்பி வைத்தது.
கடற்படை கப்பலை நிலைநிறுத்துவது ஒரு இராணுவ விரிவாக்கம் என்றும் எந்தவொரு நடவடிக்கையும் நீண்டகால இந்திய-அமெரிக்க உறவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறி அமெரிக்காவின் நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்த்தது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 1971’இல் இந்தியா மற்றும் ரஷ்யா பரஸ்பர உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் சோவியத் இந்தியாவுக்கு உதவ 10’வது செயல்பாட்டு போர் குழுவை விளாடிவோஸ்டாக்கிலிருந்து அனுப்பினர்.
இதனால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு போர்க்கப்பல்கள் இந்தியாவைத் தாக்காமல் அமைதியானது.
0
0