2 கோடி ஆண்டுகள் பழமையான அதிசய மரம்! வியப்பில் விஞ்ஞானிகள்

29 January 2021, 9:31 am
Quick Share

மத்திய தரைக்கடல் பகுதியின், லெஸ்பேகாஸ் தீவில் ஒரு புராதன மரத்தை கிரேக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இந்த மரம், பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருப்பினும், அதன் வேர்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை கண்டு விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

கிரேக்க நாட்டில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில், சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பால், காட்டிலிருந்த மரங்கள், உயிரினங்கள் எரிமலை சாம்பலில் புதைந்தன. இங்கிருக்கும் புதையுண்ட காடுகளை, பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த சாலை பணியின் போது, 19 அடி நீளம் கொண்ட புதை படிவ கல் மரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வேர்கள், கிளைகள் சிதைவடையாமல் இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எரிமலை சாம்பல் கொண்டு மூடப்பட்டிருந்ததால், இந்த மரம் பல்லாயிரம் ஆண்டுகளாக சிதைவடையாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எரிமலை வெடித்ததால், அப்பகுதி முழுவதும் இந்த மரம் உள்பட சாம்பல் பூத்து காணப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு முதல் லெஸ்போஸ் வனப்பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், விலங்குகளின் எலும்புகள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற ஒரு கல் மரம் கிடைப்பது அரிது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மரத்தை ஆராய்வதன் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய, சுற்றுச்சூழல் அமைப்பை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையும், ஆராய்ச்சியாளர்களுக்கு பிறந்துள்ளது. இப்பகுதிகளில் கிடைத்த மரங்கள், விலங்குகளின் எலும்புகளை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழமையான மரத்தின் புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாகியுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “2 கோடி ஆண்டுகள் பழமையான அதிசய மரம்! வியப்பில் விஞ்ஞானிகள்

Comments are closed.