மூன்று மாதத்தில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பேர் பலி..! பாகிஸ்தானை வாட்டும் பருவமழை..!
13 September 2020, 8:47 pmநாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் மழை தொடர்பான சம்பவங்களில் 100’க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 300’க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் 239 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பாக்கிஸ்தான் வருடாந்திர பருவமழை மற்றும் பிற மழை தொடர்பான சம்பவங்களை சமாளிக்க போராடுகிறது. இது பெரும் உயிர் மற்றும் சொத்துக்களை இழக்கிறது. அங்கு பருவமழை ஜூன்-ஜூலை முதல் செப்டம்பர் வரை நடக்கிறது.
மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்த கொரோனோவைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கும் நேரத்தில், மழைக்காலம் பாகிஸ்தானை வீழ்த்தி வருகிறது.
பருவமழையால் 310 பேர் உயிரிழந்துள்ளனர். 135 ஆண்கள், 107 குழந்தைகள் மற்றும் 70 பெண்கள் இதில் அடங்குவர் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) நேற்று தெரிவித்துள்ளது.
136 இறப்புகளுடன் சிந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக முன்னணியில் உள்ளது. அதன்பின்னர் கைபர் பக்துன்க்வாவில் 116, பஞ்சாபில் 16, பலுசிஸ்தானில் 21, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் 11 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பிற்காக பாக்கிஸ்தான் பழைய தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது. இது நிலையான மற்றும் துல்லியமான வளிமண்டல கணிப்புகளைச் செய்வது கடினம். இது தான் பாகிஸ்தானில் பருவமழையால் அதிக உயிரிழப்பு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது
0
0