பாகிஸ்தானுக்கு எரிபொருள் மற்றும் கடன்கள் நிறுத்தம்..! சவூதி அரேபியா அதிரடி முடிவு..! பின்னணி என்ன..?

12 August 2020, 5:11 pm
Saudi_pak_Updatenews360
Quick Share

பாகிஸ்தானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே இருந்த நீண்ட கால நட்பு, பாகிஸ்தானுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் கடன் நிறுத்தம் ஆகியற்றின் மூலம் முடிவடைகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் 1 பில்லியன் டாலர் கடனை சவூதி அரேபியாவுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது. 

முன்னதாக கடந்த ஆண்டு சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், தனது பாகிஸ்தான் பயணத்தில், சவூதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே 6.2 அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் 3.2 பில்லியன் டாலர் எண்ணெய் கடன் வசதியும் அடங்கும்.

காஷ்மீர் பிரச்சினையில் சவூதி அரேபியா ஆர்வம் காட்டாததன் காரணமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, சவூதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓ.ஐ.சி) நேரடி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  கடந்த ஆண்டு 370’வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இது இந்தியாவின் உள்விவகாரம் என ஒதுங்கிக் கொண்டன.  

காஷ்மீர் பிரச்சினையை இஸ்லாமிய நாடுகளிடம் கூட முன்னெடுத்துச் செல்ல முடியாத விரக்தியில், “உங்களால் அதைக் கூட்ட முடியவில்லை என்றால், காஷ்மீர் பிரச்சினை மற்றும் ஒடுக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஆதரவாக எங்களுடன் நிற்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை அழைக்க பிரதமர் இம்ரான் கானிடம் நான் கேட்டுக்கொள்ள நிர்பந்திக்கப்படுவேன்” என கூறியிருந்தார்.

இது, பாகிஸ்தானுக்கு தேவையான உதவிகளை நீண்ட நாட்களாக வழங்கி வந்த சவூதி அரச குடும்பத்தை கோபப்படுத்தியதால் அதிரடியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மற்றும் கடன்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே சவூதி அரேபியாவின் இந்த முடிவு மூலம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளும் பாகிஸ்தானை தனித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 7

0

0