பிரிட்டனின் பிர்மிங்காம் பகுதியில் பலருக்குக் கத்திக் குத்து..! காரணம் என்ன..? போலீஸ் விசாரணை..!
6 September 2020, 1:56 pmபிரிட்டனின் பிர்மிங்காம் நகரின் மையத்தில் இன்று ஒரே பலர் கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு பெரிய சம்பவம் என்று போலீஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. “என்ன நடந்தது என்பதை உறுதி செய்வதற்கான பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் எதையும் உறுதிப்படுத்தும் நிலைக்கு வருவதற்கு முன்பு சிறிது நேரம் ஆகலாம்.” எனத் தெரிவித்துள்ளனர்.
“இன்று அதிகாலை 12:30 மணியளவில் பர்மிங்காம் நகர மையத்தில் ஒரு கத்திக் குத்தல் பற்றிய புகாருக்காக நாங்கள் அழைக்கப்பட்டோம். ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டோம். பல கத்திக் குத்தல்கள் பதிவாகியுள்ளன.” என வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஒரு அறிக்கையில் கூறியது.
காவல்துறையினர் மேலும், அனைத்து அவசர சேவைகளும் சம்பவ இடத்தில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிசெய்கிறது எனத் தெரிவித்துள்ளது.
“காயமடைந்த பலரைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இவை தீவிரமானவை என்று சொல்லும் நிலையில் தற்போது இல்லை” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
இந்த ஆரம்ப கட்டத்தில் சம்பவத்திற்கான காரணங்களை ஊகிப்பது பொருத்தமானதல்ல என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும், அப்பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியது.
“உங்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. நாங்கள் இப்போது நகரம் முழுவதும் எங்கள் கண்காணிப்பை மதிப்பாய்வு செய்கிறோம். தேவையான மாற்றங்களைச் செய்வோம். இப்பகுதியில் அதிகமான போலீஸ் கண்காணிப்பில் இருப்பதை நீங்கள் காணலாம்.” என்று அது மேலும் கூறியது.
0
0