ஸ்வீடனில் தரையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்: விமானி உள்பட 8 ஸ்கைடைவிங் வீரர்கள் பலி..!!

9 July 2021, 8:26 am
Quick Share

ஸ்டோக்லாம்: ஸ்வீடன் நாட்டில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஸ்வீடன் நாட்டின் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 பேருடன் சிறிய ரக விமானம் நேற்று இரவு 7 மணியளவில் வானில் பறந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமானியை தவிர எஞ்சிய அனைவரும் ஸ்கைடைவிங் எனப்படும் சாகச விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் ஆவர்.

விமானம் ஒரோப்ரோ விமான நிலையம் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுந்த சில வினாடிகளில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 ஸ்கைடைவிங் வீரர்கள் மற்றும் விமானி என 9 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களில் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 226

0

0