6 மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: ட்விட்டரில் அரட்டை அடித்த பிரபல app-கள்..!!

Author: Aarthi Sivakumar
5 October 2021, 12:45 pm
Quick Share

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு முதல் இயங்காமல் இருந்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. அனைத்து வயதினருக்கும் மிக முக்கிய பொழுதுபோக்காக இருப்பது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்களே.

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முடங்கிப் போனது. இதனால் அதைப் பயன்படுத்தும் பயனாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர் இதன் இடையே ட்விட்டர் தளம் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கியது.

இதனால் நெட்டிசன்கள் ட்விட்டரில் , ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதங்களை memes போன்றவற்றை வேலியிட்டு கலாய்த்து வருகின்றனர். இதனிடையே களத்தில் குதித்த ட்விட்டர் ‘hello literally everyone’ என்று ட்வீட் செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவளைதலங்களும் ட்விட்டர் போட்ட ட்வீட்க்கு பதிலளிக்கும் விதமாக வாட்ஸ் அப் ‘ஹலோ’ என்றும், இன்ஸ்டா ‘ஹேப்பி மண்டே’ என்று ட்வீட் செய்திருந்தது.

பொதுவாக ட்விட்டரில் தான் எதாவது ட்ரெண்டிங் ஆகும் அனால் நேற்று ட்விட்டர்ரே ட்ரெண்டிங் ஆகா அனைத்து சமூக வலைதளவாசிகளும் ட்விட்டர் பக்கம் செல்ல சிறிது நேரத்தில் ட்விட்டர் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது.

பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் ( இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடி) டாலரை இழந்துள்ளார். இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் அதாவது 5 இடத்திற்கு தள்ளப்பட்டார்.

திங்கள் கிழமை மட்டும் பங்கு சந்தையில் 4.9 சதவீதம் அளவுக்கு பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. செப்டம்பர் பாதிக்குப் பிறகு அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலரில் இருந்து 121.6 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Views: - 623

0

0