கொரோனா ஒருபக்கம்…! விறுவிறுப்பான நாடாளுமன்ற தேர்தல் மறுபக்கம்…! இது இலங்கை அரசியல்

5 August 2020, 10:12 am
Quick Share

கொழும்பு: கொரோனா தொற்றுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முக்கிய அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 2015ம் ஆண்டு இங்கு தேர்தல் நடந்தது.

அதன்பிறகு இப்போது தான் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே கடந்த மார்ச்சில் நாடாளுமன்றத்தை கலைத்தார் கோத்தபய ராஜபக்சே. ஆனால் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படவில்லை.

பின்னர் அறிவிக்கப்பட்ட படி இன்று காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

அவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மொத்தம் 166 தொகுதிகளில் இருந்து 196 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், நாளை வாக்கு எண்ணிக்கை ஆரம்பாகும். காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவுக்குள் முழு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கொரோனா பாதித்து தனிமைப்படுத்தும் முகாம்களில் இருப்பவர்களுக்கு வாக்களிக்க பிரத்யேக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. அதாவது அவர்களுக்கு என்று மாலை 4 மணி முதல் 5 வரை ஒரு மணி நேரம் அவர்களாகவே தாமாகவே முன் வந்து வாக்களிக்க தனிமைப்படுத்துதல் முகாம்களில் சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

Views: - 0 View

0

0