திருடிய நாய் குட்டிகளை திரும்ப ஒப்படைத்த கண்ணிய திருடர்கள்! நன்றி கூறிய போலீஸ்

26 January 2021, 9:34 am
Quick Share

திருடிச் சென்ற அழகிய 5 புல்டாக் நாய் குட்டிகளை, திருடர்களே திரும்ப ஒப்படைத்த நிகழ்வு பிரிட்டனில் நடந்துள்ளது. அந்த கண்ணிய திருடர்களுக்கு, போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கின் போது, பிரிட்டனில் நாய்க்குட்டிகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. வீட்டில் வளர்ப்பதற்காக பலரும் நாய் வாங்க, முண்டியடிக்க அதன் டிமாண்ட் எகிறியது. இதனால், நாய் திருட்டு சம்பவமும் அதிகரிக்க துவங்கியது. நம் ஊரில் தெரு நாய் ஒன்று குட்டி போட்டாலே, மறுநாள் அந்த குட்டிகளில் ஒன்று கூட இருக்காது. பார்க்கும் வாண்டுகள் அதனை தங்கள் வீட்டுக்கு தூக்கி ஓடி விடுவர். அதுவே விலை உயர்ந்த நாய் என்றால் சொல்ல வேண்டுமா?

பிரிட்டனில் உள்ள வெல்லிங்போரோ பகுதியில், ஒரு வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 3 பேர் கும்பல் ஒன்று, அங்கிருந்த அழகிய 5 இங்லீஸ் புல்டாக் குட்டிகளை திருடிச் சென்றிருக்கிறது. அவர்கள் தங்கள் ஆயுதங்களை காட்டி வீட்டில் இருந்தவர்கள் அச்சுறுத்தியும் உள்ளனர். நாய்க்குட்டி திருட்டு குறித்து அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளிக்க, திருடர்களுக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் திருடிய மறுநாளே, குட்டிகள் அனைத்தையும் மீண்டும் ஒப்படைத்துள்ளனர் அந்த திருடர்கள். போலீசாரும் கண்ணிய திருடர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். ‘அவர்களிடம் மனித நேயம் ஒழிந்திருக்கிறது. குட்டிகளை திரும்ப தந்த அவர்களுக்கு நன்றி. எங்கள் குழுவிலும் நாய்கள் உள்ளன. எனவே அந்த 5 வார நாய்க்குட்டிகள் அதன் உரிமையாளருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0