பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடு: பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை!!

Author: Aarthi
15 September 2021, 9:26 am
Quick Share

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அந்நாட்டின் திட்டமிடல் துறை அமைச்சா் ஆசாத் உமா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுபற்றி அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் வணிக வளாகங்களுக்குள் நுழையவும், பொது போக்குவரத்து பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நாட்டில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைநகா் இஸ்லாமாபாதில் மட்டும் 52 சதவீத பெரியவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என கூறியுள்ளார்.

Views: - 341

0

0