பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..
Author: kavin kumar12 August 2021, 10:03 pm
பிலிப்பைன்ஸ் நாட்டின் மைன்டனோவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநிடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.போண்டாகியூட்டன் (Pondaguitan) நகரில் இருந்து 63 கிலோ மீட்டர் தூரத்திலும், Mati நகரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தூரத்திலும், Manay நகரத்தில் இருந்து 87 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 65 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமியை உருவாக்கவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. இதனிடையே பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் , கட்டிடங்கள் எதுவும் சேதமாகவில்லை என்றும் கூறினார்கள்.
0
0