பாகிஸ்தானில் திடீர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

Author: Aarthi Sivakumar
21 August 2021, 3:39 pm
Quick Share

பஞ்சாப்: பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குவாடர் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் திடீர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் சீனர்கள் பயணம் செய்த வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதேபோன்று சீனர் ஒருவர் உள்பட 30 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்பு படையினர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளனர்.

Views: - 533

0

0