ஈராக் மார்க்கெட் பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி…பலர் படுகாயம்..!!

20 July 2021, 1:06 pm
Quick Share

ஈராக்: ஈராக்கின் பிரபல மார்க்கெட் பகுதியில் திடீரென குண்டு வெடித்த விபத்தில் பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈராக் மருத்துவ அதிகாரிகள் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், இராக் மக்கள் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு தயாராகும் நிலையில் தலைநகர், பாக்தாத்தில் வகைலாத் மார்கெட் பகுதியில் திங்கட்கிழமை இரவு வெடிகுண்டு வெடித்தது. பக்ரீத் கொண்டாட்டத்துக்காக மக்கள் அலங்காரப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது இந்த கோர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் இராக்கின் கிழக்குப் பகுதியில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பு இதுவாகும். 2017 ஆம் ஆண்டு இராக்கில் ஐஎஸ் ஆதிக்கத்தை அமெரிக்க படைகளுடன் இணைந்து இராக் அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. போரில் ஐஎஸ் தோற்கடிக்கப்பட்டதாகவே இராக் அறிவித்தது.

இந்நிலையில் இம்மாதிரியான குண்டு வெடிப்புகளை ஐஎஸ் அமைப்பு அவ்வப்போது நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 140

0

0