பல்கேரியாவில் ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து: வெளியே வரமுடியாமல் தீக்கிரையான பயணிகள்…பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு..!!

Author: Aarthi Sivakumar
24 November 2021, 5:55 pm
Quick Share

பல்கேரியா: சோஃபியா நகரத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஸ்கோப்ஜே நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பல்கேரிய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சோஃபியா நகரத்தின் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென தீ பற்றியதால் பேருந்தில் இருந்த சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து தப்பினர். பலர் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 46 பேர் உடல் கருகி நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்கேரியாவில் தேசிய துக்க நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 197

0

0