சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: கட்டிடம் இடிந்ததில் பொதுமக்கள் 2 பேர் பலி!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 9:52 am
EarthQuake_UpdateNews360
Quick Share

செங்டு: சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்திற்கு லுக்சியான் கவுன்டி பகுதியை சேர்ந்த புஜி டவுன்சிப்பில் உள்ள கிராமம் ஒன்றில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

இதுதவிர 3 பேர் காயம் அடைந்து உள்ளனர். மேலும், இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Views: - 535

0

0