‘டாக்டர்களும், படித்தவர்களும் இங்கேயே பணிபுரியுங்கள்’: ஆப்கன் மக்களுக்கு தலிபான்கள் வேண்டுகோள்..!!

Author: Aarthi Sivakumar
25 August 2021, 4:52 pm
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தானியர்கள் வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர்.

ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், ஆயிரகணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் நாள் கணக்கில் காத்துகிடக்கின்றனர்.

நாட்டை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்த சிலர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெிரசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறியதாவது,

ஆப்கனில் ஷரியத் சட்டம் மட்டுமே அமல்: தலிபான்கள் திட்டவட்டம் | No democracy,  only Sharia law in Afghanistan, says the Taliban - hindutamil.in

காபூல் விமான நிலையம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை ஆப்கானியர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டினர் இந்த சாலையில் விமான நிலையத்திற்கு செல்லலாம். காபூல் விமான நிலையத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது.

ஏற்கனவே அறிவித்தபடி ஆக.,31ம் தேதிக்குள் தனது மீட்பு பணியை அமெரிக்கா முடிக்க வேண்டும். அதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது. ஆப்கானியர்கள் மீட்டு செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. டாக்டர்களும், படித்தவர்களும் ஆப்கனை விட்டு செல்லாமல், இங்கேயே பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 264

0

0