நேரலையில் செய்தியாளரை மிரட்டிய தலிபான்கள்: புகழ்ந்து பேசும்படி துப்பாக்கி முனையில் மிரட்டல்..அதிர்ச்சி வீடியோ!!

Author: Aarthi Sivakumar
31 August 2021, 6:49 pm
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரின் பின்னால் தாலிபான்கள் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு முழுமையாக வெளியேற இன்றே கடைசி நாளாகும். இதனால் காபூல் விமான நிலையம் அருகே பதற்றமான சூழல் நிலவுகிறது. முடிந்தவரை மக்களை மீட்கும் பணியில் உலக நாடுகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அமெரிக்க படைகள் வெளியேறியப் பின்னர் புதிய ஆட்சியை தாலிபான்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கந்தஹாரில், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்திருக்கின்றனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின்போது தொகுப்பாளரின் அருகில் தாலிபான் அமைப்பினர் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஈரானிய செய்தியாளரான மாசிஹ் அலினேஜாட் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில் இது விநோதமானது. தொலைக்காட்சி தொகுப்பாளரின் பின்னால் துப்பாக்கியுடன் தாலிபான்கள் காட்சியளிப்பதுடன் இஸ்லாமிக் எமிரெட்

Views: - 340

0

0