தலிபான்கள் தலைமையில் ஆப்கன்: காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தி அட்டூழியம்…!!
Author: Aarthi Sivakumar16 August 2021, 6:22 pm
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் காபூலில் அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தேடி வீடு வீடாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். காபூல் நகரில் வீடு வீடாகச்சென்று தலிபான் பயங்கரவாதிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், போர்வீரர்களின் குடும்பத்தினர் என வீடு, வீடாக தலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர். விமானசேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தங்களின் பாதுகாப்பிற்காக ஆப்கன் மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது தலிபான்கள்.
0
0