தான்சானியா நாட்டு அதிபர் ஜான் மகுபலி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Author: Aarthi Sivakumar
18 March 2021, 9:58 am
thanzania pm death - updatenews360
Quick Share

டோடோமா: தான்சானியா நாட்டு அதிபர் ஜான் மகுபலி உடல் நலக்குறைவால் காலமானார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான் மகுபலி இருந்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், ஜான் மகுபலி உயிரிழந்ததாக தான்சானியா நாட்டு துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அதிபர் ஜான் மகுபலிக்கு, இருதய பாதிப்புக்கு மார்ச் 12ம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.

Views: - 179

0

0