உடலில் இயற்கையாகவே சுரக்கும் மது! இந்த பெண் படும் கஷ்டத்த பாருங்க!

7 February 2021, 8:37 am
Quick Share

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரின் உடலில், இயற்கையாகவே மது சுரக்கும் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் பல இன்னல்களை சந்தித்த வருகிறார். இதிலும் அந்த பெண் ‘டீ டோட்டலராம்’.. பாவம் தான் போங்க..

மதுவுக்கு அடிமையானவன், தன்மை இழப்பது மட்டுமன்றி, தன் குடும்பத்தையும், சமூகத்தையும் இழந்து விடுவான். மனிதனை அரக்கனாய் மாற்றிவிடும் வல்லமை படைத்த அந்த மதுவால், கெட்டவர்கள் பலபேர். மதுவை விட்டு திருந்தி வாழ்பவர்களும் உள்ளனர். இந்நிலையில், மது உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாக ‘டீ டோட்டலர்’ பெண் ஒருவரின் உடலில், இயற்கையாகவே மது சுரக்கும் அதிசய சக்தியை பெற்றுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள கனெக்டிகட் மாகாணத்தில் வசித்து வருபவர் சாரா லெபெப்வே. 38 வயது பெண்ணான இவர், டீ டோட்டலராக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ‘‘ஆட்டோ பிரீவரி சின்ட்ரோம்’’ (ஏபிஎஸ்) என்ற அரிய வகை நோய் ஒன்று உள்ளதை சமீபத்தில் டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால், அவருக்கு இயற்கையாகவே உடலில் மது சுரக்குமாம். இதனால் மது அருந்தாமலேயே அவர் போதையாகி விடுகிறார். அவருக்கு போதை என்றால் இது தான் என இதுநாள் வரை தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறார். சமீபத்தில் தான், ஏபிஎஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டிருக்கிறார் அந்த அபலை பெண்.

இந்த நோயால் அவருக்கு வரும் கஷ்டங்கள் ஏராளம். குடித்துவிட்டு கார் ஓட்டியதாக, போலீசாரிடம் ஒருமுறை சிக்கி உள்ளார். தற்போது மஞ்சள் காமாலையும் வந்துவிட்டது. சிகிச்சையில் உள்ள அவருக்கு, உடனடியாக கல்லீரலை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால் தொடர்ந்து மது சுரந்து கொண்டே இருப்பதால், அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் டாக்டர்கள். இந்த விஷயம் நம்ம ஊரு ‘குடி’மகன்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. காசு மிச்சம் என நோயை வாங்கி கொண்டு வந்து விட போகிறார்கள்…

Views: - 20

0

0