நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் கொடூர செயல்: 110 விவசாயிகள் படுகொலை…!!

30 November 2020, 8:24 am
nigeria - updatenews360
Quick Share

அபுஜா: நைஜீரியாவில் வயல்வெளியில் வேலை செய்த விவசாயிகள் 110 பேர் போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் அவர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், போர்னோ ஸ்டேட் பகுதியருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் தனக்கு உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து விவசாயிகளை கடுமையாக தாக்கி கொடூர முறையில் கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த தகவலை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று ஐ.நா. அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதவிர அந்த பயங்கரவாத கும்பல் தங்களுடன் பெண்களையும் கடத்தி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0