அமெரிக்க பள்ளிக்கு இந்திய பெண்ணின் பெயர்! அப்படி என்ன சாதனை பண்ணாங்க தெரியுமா?

3 April 2021, 9:00 am
Quick Share

அமெரிக்காவில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயர் சூட்டப்பட உள்ளது. பள்ளி மாணவ – மாணவியர் நலனில் அக்கறை கொண்ட, சமூக சேவகியான சோனால் புச்சருக்கு இந்த கவுரவம் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில், இந்தியாவை சேர்ந்த சோனால் புச்சர், கடந்த 1984 ஆம் ஆண்டு குடியேறினார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த இவர், பிஸியோ தெரபியில் பட்டம் பெற்றிருக்கிறார். தனது திருமணத்துக்கு பின் அமெரிக்கா சென்ற சோனால், சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் நலனிலும் அதிக அக்கறை காட்டி இருக்கிறார். கல்வியை மேம்படுத்த, பல புதுமையான திட்டங்களையும் தான் வசித்த ஹூஸ்டன் நகரில் செயல்படுத்தி இருக்கிறார். நன்றாக படிக்கும் மாணவ – மாணவியருக்கு ஊக்கத் தொகை கொடுத்து அவர்களை கவுரவித்திருக்கிறார். சமூகத்தை பற்றிய அக்கறை கொண்டிருந்த அவர், ஃபோர்ட் பெண்ட் ஐ.எஸ்.டி வாரிய அறங்காவலர் குழுவில், ஆறு ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதன் வாரியத் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

தன் வாழ்நாளின் கடைசி வரை சமூக சேவை செய்த சோனால் புச்சர், புற்று நோய் காரணமாக, கடந்த 2019 ஆண் ஆண்டில், தன் 58 வது வயதில் இறந்தார். இந்நிலையில், ஹூஸ்டனில், கட்டப்பட்டு வரும் துவக்கப் பள்ளி ஒன்றுக்கு, சோனாலி புச்சரின் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பள்ளி வரும் 2023 ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply