3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புளூமூன்: இன்று வானில் தெரியும் அதிசயம்…!!

31 October 2020, 11:46 am
bluemoon - updatenews360
Quick Share

வானில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘புளூமூன்’ நிகழ்வு இன்று ஏற்பட உள்ளது.

ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் 2வது பவுர்ணமி புளூமூன் என அழைக்கப்படுகிறது. புளூமூன் ஏற்படும்போது நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது எனவும், இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக இதுபோன்ற புளூமூன் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது. இந்த புளூமூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புளூமூன் மீண்டும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியும், 2026ம் ஆண்டு மே 31ம் தேதியும், 2028ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியும் தோன்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 18

0

0