மியான்மரில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு..!!

27 March 2021, 8:58 am
Myanmar_protests_updatenews360
Quick Share

யாங்கூன்: மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌

நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ‌இந்த போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

Views: - 10

0

0