கரணம் தப்புனா மரணம்: துடுப்பு பலகையை நெருங்கிய ராட்சத திமிங்கலம்…ட்ரோன் கேமராவில் பதிவான திகில் காட்சி!!

Author: Aarthi Sivakumar
3 September 2021, 4:24 pm
Quick Share

அர்ஜென்டினா: போர்டோ மாட்ரின் பகுதியில் துடுப்புப் பலகைக்கு மிக அருகில் திமிங்கலம் ஒன்று வந்து சென்ற திகிலூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Horrifying-scenes-of-a-whale-coming-very-close-to-the-paddle-board-in-Argentina-have-been-released

போர்டோ மாட்ரின் பகுதியில் பெண் ஒருவர் துடுப்பு பலகையில் சென்று கொண்டிருக்கையில் எதேச்சையாக ட்ரோன் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. அப்போது, துடுப்பு பலகை அருகே மிகப்பெரிய திமிங்கலம் வருகிறது. லேசாக துடுப்பு பலகையை தட்டி விட்டு , பின்னர் துடுப்பு பலகைக்கு கீழேயே பயணிக்கிறது.

ட்ரோன் கேமரா மூலம் பதிவான இந்த திகில் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமிங்கலம் வந்து சென்ற ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என இருந்ததாக அந்த துடுப்பு பலகையில் இருந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

Views: - 391

0

0