இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை..மீட்பு பணி தீவிரம்..!!

15 January 2021, 10:20 am
Quick Share

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதேபோல் கவர்னரின் அலுவலகம் மற்றும் பல்வேறு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 11

0

0