பதவியேற்பு விழாவில் பளார்: ஆளுநரை ஓங்கி அறைந்த மர்மநபர்…வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 9:57 am
Quick Share

ஈரான்: பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த ஆளுநரை மர்ம நபர் ஒருவர் பளார் என அடித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மேடை ஏறிய மர்ம நபர் திடீரென அவரை பளார் என்று அடித்து சண்டையிட தொடங்கினார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் பாதுகாவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர் அயுப் அலிசாதே என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்ற போதும், தன் மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததற்காக அவர் கோபத்தில் இருந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அசர்பைஜான் மாகாண கவர்னராக அபெதின் கோர்ராம் பதவியேற்கும் பொது, நிகழ்ச்சி மேடையில் ஏறி அவரை அறைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநரை, மர்ம நபர் பளார் என்று அடித்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 682

0

0