பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது…!!

18 November 2020, 7:31 am
Ruissia Virus Outbreak
Quick Share

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 14,524 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

அந்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 46,273 ஆக ஆனது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.