பார்வையாளர்கள் இன்றி நடைபெறுகிறது ஒலிம்பிக் போட்டிகள்: டோக்கியோவில் அவசரகால நிலை அறிவிப்பு..!!

8 July 2021, 12:44 pm
Olympic - Updatenews360
Quick Share

டோக்கியோ: டோக்கியோவிற்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது. டோக்கியோ நகரில் தினசரி கொரோனா பாதிப்பு 920 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் அங்கு அவசரகால நிலையை அறிவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜப்பானின் பொருளாதார மந்திரி யசுதோஷி நிஷிமுரா, புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை இருக்கும் என கூறி உள்ளார்.

டோக்கியோ போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களை தடைசெய்துள்ளனர். உள்நாட்டு பார்வையாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என திட்டமிட்டு இருந்தனர். பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று அல்லது நாளை ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா தொற்றுநோயால் ஏற்கனவே தாமதமாக நடைபெறுகிறது மற்றும் பெரிய பட்ஜெட் மீறல்கள் உட்பட தொடர்ச்சியான பின்னடைவுகளால் ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்கள் ஆரவாரம் செய்வதையோ அல்லது பாடுவதையோ விட கைதட்டல் மூலம் தங்கள் ஆதரவைக் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜப்பானில் மற்ற நாடுகளைப்போல் கொரோன பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால் 810,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 14,900 இறப்புகள் அங்கு பதிவாகி உள்ளன.

Views: - 219

0

0