டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்: 54 இந்திய வீரர்கள் பங்கேற்பு…தேசியகொடியை ஏந்தி செல்கிறார் மாரியப்பன் தங்கவேலு..!!

Author: Aarthi Sivakumar
24 August 2021, 10:12 am
Quick Share

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 40 ஆண்கள் , 14 பெண்களுடன் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, ஜூடோ, பாராகனோ, பளுதூக்குதல், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சோ் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். பிரேசிலில் கடந்த 2016 உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தேசியக்கொடியை ஏந்தி செல்கிறார். அவரே ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்தப்போகும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார். இந்தியா சார்பில் தொடக்க விழாவில் 5 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Views: - 398

0

0