நடுவானில் பறந்த விமானம்…வீட்டின் கூரை மேல் விழுந்த அதிர்ச்சி காட்சிகள்: விமானி உள்பட 4 பேர் பலி..!!(வீடியோ)

Author: Aarthi
29 July 2021, 12:38 pm
Quick Share

உக்ரைன்: வானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனில் பிரைகார்பட்டியா மாகாணத்தில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 4 பேர் பயணம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து விமானம் விழுந்ததும் வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 333

0

0