3,000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்தது ‘டாஸ்மேனியன் டெவில்’!!….

Author: Aarthi
6 October 2020, 2:15 pm
australia animal - updatenews360
Quick Share

சிட்னி: அழிவின் விளிம்பில் இருந்த ‘டாஸ்மேனியன் டெவில்’ விலங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு மீண்டும் தேசிய பூங்காவுக்குள் விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அழிவின் விளிம்பில் இருந்த ‘டாஸ்மேனியன் டெவில்’ என்ற விலங்கு, மீண்டும் தேசிய பூங்காவுக்குள் விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருவை போல், பாலூட்டி இனங்களில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு தான் இந்த ‘டாஸ்மேனியன் டெவில்’. இவை ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டும் காணப்பட்டதால், இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளது.

கருப்பு நிறமும், கூரிய பற்களும், இறந்த உடல்களை தின்னும் வழக்கமும் உள்ள இவை பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அலறும் என்பதால் இவற்றிற்கு டெவில் என்ற பெயர் வைத்துள்ளனர். இவை இறந்த உடல்களை திண்பதன் மூலம், சுற்றுச்சூழலை மிகவும் பாதுகாத்து வந்தது.

ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கயைில் இருந்துள்ளது. ஆனால், படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. இந்நிலையில், இவற்றை பாதுகாக்கவும், இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மேனியன் டெவில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்து வந்தது. அதன் ஒரு கட்டமாக 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் அவிழ்த்துவிடப்பட்டன.

Views: - 31

0

0