வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டித்து கொலை: பிரான்ஸ் அதிபர் கண்டனம்..!!

17 October 2020, 5:50 pm
paris death - updatenews360
Quick Share

வகுப்பில் முகமது நபி குறித்து பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் உள்ள பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கார்ட்டூன் குறித்து பாடம் எடுத்தாக கூறி, தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபர் ஒருவரை சுட்டுக்கொன்றனர். தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான், இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரால் கொல்லப்பட்ட ஆசிரியர் 47 வயதான சாமுவேல் பாட்டி என தெரியவந்துள்ளது.

போலீசாரால் கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி, மாஸ்கோவில் பிறந்த 18 வயதேயான செச்சென் இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் சாமுவேல் கொலை தொடர்பாக நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெற்றோர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.