உலகம் முழுவதும் உச்சம் பெற்ற கொரோனா பரவல்: 15.58 கோடியை கடந்த பாதிப்பு..!!

6 May 2021, 8:55 am
Corona_Test_UpdateNews360
Quick Share

பீஜிங்: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15.58 கோடியை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.58 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,58,13,366 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,32,12,080 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்து 54 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 19,346,403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,288 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Views: - 173

0

0