கொரோனாவுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: விரைவில் ஒப்புதல் என தகவல்…!!

20 December 2020, 8:26 am
oxford vaccine - updatenews360
Quick Share

லண்டன்: கொரோனாவுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனகா மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு வருகிற 28 அல்லது 29ம் தேதி இங்கிலாந்து அரசின் மருந்துகள் மற்றும் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கான ஒப்புதல், உலக நாடுகள் மத்தியில் இதன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

இந்தியா ஏற்கனவே இந்த தடுப்பூசியை 5 கோடிக்கு மேல் தயாரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

Views: - 1

0

0