காதலுக்கு வயது இல்லை.. பல் இல்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞர்!

23 January 2021, 10:14 am
Quick Share

81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தம்பதிகளாக வாழ்த்து வருவது தான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாபிக். தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் என யாரை பற்றியும் கவலைப்படாமல் இந்த ஜோடி மகிழ்ச்சியாக இருக்கிறது.

காதலுக்கு கண் இல்லை என கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஜோடி காதலுக்கு வயது கூட தேவையில்லை என நிரூபித்துள்ளனர். பேஸ்புக் மூலம் அறிமுகமான பாட்டியுடன் சாட்டிங் செய்த இளைஞர் ஒருவர், அவரையே காதலித்து கை பிடித்துள்ளார். பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ் (81 வயது) மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த மஹமத் (36 வயது) என்ற வாலிபரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களுக்குள் நடந்த சாட்டிங்கிற்கு பின், நட்பை காதலாக புதுப்பித்துள்ளனர்.

கடந்த 2019 நவம்பர் மாதம், தனது காதலனை பார்க்க பிரிட்டனிலிருந்து எகிப்து பறந்து சென்றிருக்கிறார் ஐரிஸ். அவரை வரவேற்க ஏர்போர்ட்டில் காத்திருந்த மஹமத், முதன்முறை நேரில் சந்தித்த போதே, ஐரிஸை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டாராம். அதனை தொடர்ந்து தங்கள் காதலை ஒருவொருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட இந்த ஜோடி, தம்பதிகளாக வாழத் துவங்கிவிட்டனர்.

இதுகுறித்து மஹமத் கூறுகையில், ‘இப்படி ஒரு அழகான தேவதையை காதலியாக பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவன்’ என்றார். காதல் என்றால் வில்லன் இல்லாமலேயா..! ஆம்.. இவர்கள் காதலுக்கு வில்லனாக வந்திருக்கிறார் ஐரிஸின் மகன். 54 வயது நிரம்பிய ஐரிஸ் மகன் ஸ்டீபன், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பை அசால்ட்டாக எதிர்கொண்ட ஐரிஸ், தனது காதலில் உறுதியாக நின்றிக்கிறார். இதனால் மகன் அவரிடமிருந்து பிரிந்து போக, குடும்பமே இரண்டாக உடைந்திருக்கிறது.

இதனிடையே கொரோனா பரவ, தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனுக்கு செல்ல மஹமத்துக்கும் விசா கிடைக்கவில்லை. மீண்டும் தனது காதலியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் மஹமத். இவர்கள் காதலை சமூக வலைதளங்களில் ‘பொருந்தா காதல்’ என விமர்சித்தாலும், அதுகுறித்து இந்த ஜோடிக்கு கவலை இல்லையாம்.. நல்லா இருங்கப்பா…

Views: - 9

0

0