விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி: அமெரிக்க மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு கொரோனா தடுப்பூசி..!

5 July 2021, 11:49 pm
Quick Share

அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு பரிசோதனை நோக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஓக்லாண்ட் மிருக காட்சி சாலையில் இருக்கும் புலிகள் மற்றும் கரடிகளுக்கு பரிசோதனை நோக்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜிஞ்சா, மோலி ஆகிய 2 புலிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த மலை சிங்கங்கள், மரநாய்கள், கரடிகள் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது.

சான் டீகோ மிருகக்காட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணத்தால் ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.இது குறித்து உயிரியல் பூங்காவில் பணிபுரியும் கால்நடைகளின் துணைத் தலைவர் அலெக்ஸ் ஹெர்மன், “பூங்காவில் உள்ள எந்த விலங்குக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விரும்புகிறோம். எனவே அவற்றிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

Views: - 175

0

0