டிக்டாக் பெண் பிரபலத்தை 400 பேர் மானபங்கம் செய்த அதிர்ச்சி… பாக்., சுதந்திர தினத்தன்று நடந்த கொடூரம்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
18 August 2021, 8:20 pm
pakistan - updatenews360
Quick Share

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான பெண் ஒருவரை 400க்கும் மேற்பட்டோர் மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ம் தேதி அந்நாட்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது, லாகூரில் உள்ள Minar-e-Pakistan என்ற தேசிய நினைவுச் சின்னத்தில் பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர். அங்கு நடக்கும் நிகழ்வுகளை படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அங்கு திரண்ட கும்பல் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.

மேலும், அப்பெண்ணையும், அவரது நண்பர்களின் உடமைகளை களவாடியும், ஆடைகளை கிழித்தும் அட்டகாசம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் இம்ரான் கானும், லாகூர் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தரும் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆபாசமாக சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்ததாக ஒரு தரப்பினரால் சொல்லப்படுகிறது.

Views: - 371

0

0