கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரபல வோட்கா கம்பெனி செய்த காரியம்…!

24 March 2020, 4:36 pm
Quick Share

உலகம் முழுக்க கொரோனாவால் ஏற்பட்ட பரபரப்பு என்று ஓய்ந்துபோகுமென்று யாருக்கும் தெரியாது. சீனாவில் கொரோனாவிற்க்கடுத்து ஹாண்டா என்னும் கொடிய வைரஸால் தாக்கி ஒரு பலியான சம்பவம் நாம் அனைவரையும் உருக்குலையசெய்கிறது. ஏற்கன 16000 உயிர்களை பறித்த கொரோனா இன்னும் பல உயிர்களை சூறையாட காத்திருக்கிறது.


இந்நிலையில் பிரபல தொழிற்சாலைகள் அவர்களால் செய்த உதவிகளை செய்து வருகின்றனர். அதன் வரிசையில் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல வோட்கா மதுபான கம்பெனியான டிட்டோஸ் 24 டன் எடையுள்ள ஹாண்ட் சானிடைஸர்களை உற்பத்தி செய்யப்போவதாக அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.


“கொரோனா வைரஸால் பாதிப்பு இன்னும் குறையாதபட்சத்தில் எங்களது வோட்கா கம்பெனியில் வோட்கா தயாரிப்பதை இரண்டு வாரங்கள் நிறுத்திவைக்கப்பட்டு அந்நேரத்தில் மக்களுக்கு தேவையான ஹாண்ட் சானிடைஸர்களை தயாரிக்க முன்வந்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் டெக்சாஸ் மக்கள் அனைவருக்கும் இவை வந்து சேரும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.