உருமாறும் டெல்டா… அபாய கட்டத்தில் உலகம் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

3 July 2021, 5:37 pm
Who Warns - Updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. இதனால் உலக நாடுகளே ஸ்தம்பித்தது. பல்வேறு முன்னெச்சரிகக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலை பரவியது.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவிய கொரோனா வைரஸ் ரகத்திற்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அதன் தலைவர் டெட்ரோஸ், டெல்டா வகை தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, உலகின் 98 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றும் டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 220

0

0