முக்கியத்துவம் பெறும் ஜோ பைடன் அமைச்சரவை: துணை சுகாதாரத்துறை அமைச்சராக திருநங்கை நியமனம்..!!

Author: Aarthi Sivakumar
25 March 2021, 5:24 pm
biden joe - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது.

இந்த நியமனத்துக்கு குடியரசு கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில், மசோதா செனட் சபையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. ரேச்சல் லெவின் 52க்கு 48 என்ற ஆதரவு வாக்குகள் வித்தியாசத்தில் முதல் துணை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செனட்டால் அங்கீகரிக்கப்பட்ட முதல் வெளிப்படையான திருநங்கை தனிநபராகவும், மிக உயர்ந்த தரத்தில் முதல் திருநங்கை பெடரல் அதிகாரியாகவும் திகழ்கிறார்.

லெவின் முன்னர் பென்சில்வேனியாவின் சுகாதார செயலாளராக இருந்தார். அவர் மாநில மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். கடந்த வாரம் செனட், கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை புதிய சுகாதார செயலாளராக உறுதிப்படுத்தியது. இவர் இந்த துறைக்கு தலைமை பொறுப்பேற்கும் முதல் லத்தீன் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 94

0

0