தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த டிரம்ப் : புதிர் வைத்து பேச்சு!!

14 November 2020, 2:38 pm
Trump - Updatenews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு டிரம்ப் இறங்கி வந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றட்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், என்ன நடக்குமோ என்ன ஆட்சி நடக்குமோ என யார் அறிவார் என்றும், அதற்கு காலம் பதில் சொல்லும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

Views: - 23

0

0