அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டிஸ்மிஸ்..! தேர்தல் தோல்விக்கு மத்தியில் டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!

10 November 2020, 1:04 pm
Mark_Esper_USA_UpdateNews360
Quick Share

தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து போராடி வரும் டொனால்ட் டிரம்ப், அதிரடியாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிவிட்டார். ராணுவத் தலைமையகமான பெண்டகனின் தலைவர் மார்க் எஸ்பர் எப்போதும் தன்னிடம் விசுவாசமாக இல்லை என்று அவர் நம்புகிறார். 

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டு அமைதியின்மையின் போது இராணுவத்தைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இடையேயான கூர்மையான வேறுபாடுகள் உட்பட, பல விசயங்களில் எஸ்பர் மீது டிரம்ப் அதிகளவில் அதிருப்தி அடைந்ததால் இந்த முடிவு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இந்த நடவடிக்கை சர்வதேச நட்பு நாடுகளையும் பெண்டகன் தலைமையையும் சீர்குலைக்கக்கூடும். மேலும் ஜோ பிடன் ஜனாதிபதி பதவியை ஏற்கத் தயாராகி வருவதால் இந்த நடவடிக்கை அமெரிக்காவை மீண்டும் ஒரு மோசமான காலத்திற்குள் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.

மறுதேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதிகள் பெரும்பாலும் அமைச்சரவை உறுப்பினர்களை மாற்றுவர். ஆனால் பதவியிழந்த ஜனாதிபதிகள் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்றுவதற்காக பதவியேற்பு நாள் வரை தங்கள் பென்டகன் தலைவர்களை வைத்திருக்கிறார்கள்.

தடாலடியாக நேற்று ட்ரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட்டில் இந்த முடிவை அறிவித்தார். மேலும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனரான கிறிஸ்டோபர் மில்லர் செயல் செயலாளராக பணியாற்றுவார் என்றும் அறிவித்துள்ளார். 

பாதுகாப்புத் துறையில் மார்க் எஸ்பருக்கு அடுத்த நிலையில் இருந்த நம்பர் 2 தரவரிசை அதிகாரி, துணை பாதுகாப்பு செயலாளர் டேவிட் நோர்கிஸ்ட்டை புறக்கணித்து புதிதாக ஒருவரை டிரம்ப் கொண்டு வந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Views: - 30

0

0