சீனாவின் டிக் டாக்கிற்கு விழுந்த அடுத்த அடி…! அமெரிக்காவிலும் வருகிறது தடை

1 August 2020, 11:31 am
Donald_Trump_UpdateNews360 (2)
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

லடாக் பகுதியில்,  ஜூன் 15ம் தேதி இந்திய, சீன ராணுவம் இடையே மோதல் மூண்டது. அப்போது நடைபெற்ற சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதன் காரணமாக எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், அந்நாட்டு நிறுவனங்களின் செல்போன் செயலிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன.

மத்திய அரசுக்கு அழுத்தமும் தரப்பட்டது. இதையடுத்து, தேச நலனுக்கு எதிராகவும், தனிநபர்களின் தகவல்கள் பகிரப்படும் அபாயம் இருப்பதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந் நிலையில்,  இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் அதிரடியை தொடங்கி உள்ளது. சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆகையால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து உள்ளது.

இந் நிலையில், சீனாவின் செயலி டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலிக்கு பதிலாக வேறு ஒரு மாற்று செயலி உருவாக்கப்படும் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.

Views: - 17

0

0