அனைவரையும் முத்தமிட விருப்பம்..! புதிய எனர்ஜியுடன் மீண்டும் களமிறங்கும் டிரம்ப்..!

Author: Sekar
13 October 2020, 9:30 am
Donald_Trump_UpdateNews360
Quick Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொரோனா தொற்று தற்போது இல்லை என சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக வெள்ளை மாளிகையின் மருத்துவர் டாக்டர் சீன் கான்லி நேற்று இரவு வெளியிட்ட ஒரு குறிப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று புளோரிடா மாகாணத்தில் இருந்து தனது மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு மீண்டும் வந்த டிரம்ப், தான் மிகவும் சக்திவாய்ந்தவராக உணர்ந்ததாகக் கூறினார்.

மேலும் பார்வையாளர்கள் அனைவரையும் முத்தமிட விரும்புவதாக கூறினார். “நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன். நான் அந்த பார்வையாளர்களுக்குள் நடப்பேன். பார்வையாளர்கள் அனைவரையும் முத்தமிடுவேன்.” என்று அவர் கூறினார்.

தான் மிகுந்த சக்தியுடன் இருப்பதாகவும், தான் ஒரு வயதானவர் அல்ல என்றும் கூறிய டிரம்ப், இந்த அறிக்கையை விமர்சிக்கும் நபர்களின் மன நிலை தான் நோய்வாய்ப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

நவம்பர் 3 அதிபர் தேர்தலில் தனது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடனை எதிர்த்துப் போராடும் டிரம்ப், அமெரிக்காவின் வரலாற்றில் இது மிக முக்கியமான தேர்தல் என்று கூறினார்.

“இந்த தேர்தல் மிக முக்கியமானது. பிடென் தனது கட்சியின் நியமனத்திற்கு ஈடாக ஒரு ஊழல் பேரம் பேசியுள்ளார். அவர் சோசலிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார். அது உங்களுக்குத் தெரியும். அவருக்கு எந்த பலமும் இல்லை. அவருக்கு எந்த சக்தியும் இல்லை.” என்று அவர் கூறினார்.

Views: - 35

0

0