இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இதைப் பண்ணுங்க..! ஜோ பிடெனுக்கு டிரம்ப் அட்வைஸ்..!

20 April 2021, 1:35 pm
biden_trump_updatenews360
Quick Share

தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில முஸ்லீம் நாடுகளின் மீதான பயணத் தடையை மீண்டும் அமல்படுத்துமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பிடெனை வலியுறுத்தியுள்ளார்.

“ஜோ பிடென் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், அவர் சில வெளிநாட்டினர் மீதான பயணத் தடை மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதான அனைத்து சோதனைத் தேவைகளையும், நான் வெற்றிகரமாக அமல்படுத்திய அகதிகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.” என டிரம்ப் ஒரு அறிக்கையில் கூறினார்.

“பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு ஆன்லைனில் ஆட்சேர்ப்பு செய்கிறார்கள். பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் நம் நாட்டிலிருந்து விலக்கி வைக்க, நாங்கள் ஸ்மார்ட் மற்றும் காமன்சென்ஸ் விதிகளை வைத்திருக்க வேண்டும். 

இதன் மூலம் டிரம்ப் ஆட்சிக் காலத்திற்கு முன்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செய்த பல குடியேற்ற தவறுகளை நாம் மீண்டும் செய்யக்கூடாது.‘‘ என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட பல முஸ்லீம் நாடுகளில் இருந்து பயணம் செய்ய டிரம்ப் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பிடென் தடையை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் தற்போது தடையை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 94

0

0