கொரோனா பாதிப்பையடுத்து ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்..! உலக அழிவின் ஆண்டா இந்த 2020…?

25 March 2020, 10:13 am
Quick Share

உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட பீதி அடங்குவதற்கு முன்பு தற்போது ரஷ்யா நாட்டின் எல்லைப்பகுதியிலுள்ள குறில் தீவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பான் நாடு வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சப்போரோ நகரிலிருந்து சுமார் 1400 மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் உருவெடுத்துள்ளது.


கடலில் சுமார் 59 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வை இன்று உணர்ந்ததால் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்து அதிர்வு சற்றுத் தணிந்தால் மிகவும் சிறிய உயரத்தில் சுனாமி அலைகளை அங்கு காணப்பட்டது. அதிஷ்டவசமாக இந்த விதமான உயிர்சேதமும் அந்நாட்டில் இதுவரை ஏற்படவில்லை.


பசிபிக் சுனாமி ஆய்வு மையம் அறிவித்தபடி நிலநடுக்கம் ஆரம்பித்த மையப்பகுதியிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் சுற்றளவில் தான் சுனாமி அலையின் பாதிப்பிருக்கும். அதனால் இந்த நிலநடுக்கம் சப்போரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தாதென்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.